Posts

ஜாதியை ஒழிக்க நிச்சயமாகவே நாம் விரும்புகிறோமா?

சினேகா தனது சான்றிதழை "ஜாதியுமில்லை, மதமுமில்லை" எனக் குறிப்பிட்டு வாங்க முடிந்தது. சமூக வலைதளத்தில் இந்த செய்தி வந்தவுடனே, எனக்குள் இருந்த சமூக ஆர்வலன் விழித்துக்கொண்டான். ஆக, ஜாதிப்பிரிவினால் கிடைக்கும் இட ஒதுக்கீடு, அவளது குழந்தைகளுக்கு கிடைக்காது என்பதை ஒருகணம் யோசித்துப்பார்த்தேன். நிச்சயமாகவே அவளது முடிவு துணிச்சலானதுதான். ஜாதி மறுப்பு சான்றிதழைப் பெற்றுவிட்டால், ஜாதியை வேரோடு அழித்துவிடலாம் என்று நம்மில் எத்தனை பேர் நம்புகிறோம்? அப்படி நம்புவதற்கு நான் ஒரு முட்டாள் அல்ல. நம் பிள்ளைகளின் கலப்பு திருமணத்தையும் நாம் செயல்படுத்தாத வரையில், ஜாதி ஒழியாமல் தான் இருக்கும். இந்தியாவின் ஒரு துக்ககரமான நிலை என்னவென்றால், கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஜாதியை ஆதரிப்பவர்கள் தான். நம் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், நாம் ஜாதிப் பாகுபாட்டை இன்னும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். என்னுடைய குடும்ப வட்டாரத்திலும் இது உண்டு என்று என்னால் கூறமுடியும். "ஜாதியை நாங்கள் ஏற்கவில்லை" என்று அவர்கள் கூறினாலும், தங்கள் பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது, ஒரே ஜாதியில் தான் அதை செய்யவேண்ட

தீவிரவாதத்தை பழிவாங்க முடியுமா?

நான் உணர்ச்சியற்றுப் போன நேரம் அது . 40 இளைஞர்களை கோழைத்தனமாக கொன்று குவித்த ஒரு தீவிரவாத வெறிச்செயல் அன்று நிகழ்ந்திருந்தது . அதின் புகைப்படங்களை பார்க்கும் போது , அது அண்டை நாட்டிலிருந்து ஊடுருவி , மும்பையில் பெரும் நாசத்தை உண்டாக்கிய மற்றுமொரு சம்பவத்தை நினைவூட்டியது . இதயம் வலியால் துடிக்க ஆரம்பித்தது . ஒவ்வொருமுறையும் இப்படி இந்தியா தனது வீரர்களை இழக்கும் போது , ஊடகங்களில் ஒரு பரபரப்பு ஆரம்பித்துவிடும் . " பழிவாங்க வேண்டும் " என்று அதின் குரல் ஒலிக்கும் . இந்தமுறையும் அதே போல , " புல்வாமாவிற்காக பழிதீர்ப்போம் " என்று ஊடகங்கள் அனைத்தும் பேச ஆரம்பித்தன . கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனும் தன்னில் கிளர்ச்சி கொண்ட தருணம் அது . பழிவாங்க வேண்டும் என்ற நிலை ஓங்கி நின்றது . சரி , எப்படி பழிவாங்குவது ? தீவிரவாதத்தை எப்படித்தான் வேரறுப்பது ? அழிப்பதற்காக ஆயத்தப்படும் எந்த ஒரு தீவிரவாதியும் , தனது அழிவைக் குறித்து ஒருபோதும் கவலைப்படுவதில்லை . நடந்த இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதியு