ஜாதியை ஒழிக்க நிச்சயமாகவே நாம் விரும்புகிறோமா?

சினேகா தனது சான்றிதழை "ஜாதியுமில்லை, மதமுமில்லை" எனக் குறிப்பிட்டு வாங்க முடிந்தது. சமூக வலைதளத்தில் இந்த செய்தி வந்தவுடனே, எனக்குள் இருந்த சமூக ஆர்வலன் விழித்துக்கொண்டான். ஆக, ஜாதிப்பிரிவினால் கிடைக்கும் இட ஒதுக்கீடு, அவளது குழந்தைகளுக்கு கிடைக்காது என்பதை ஒருகணம் யோசித்துப்பார்த்தேன். நிச்சயமாகவே அவளது முடிவு துணிச்சலானதுதான்.

ஜாதி மறுப்பு சான்றிதழைப் பெற்றுவிட்டால், ஜாதியை வேரோடு அழித்துவிடலாம் என்று நம்மில் எத்தனை பேர் நம்புகிறோம்? அப்படி நம்புவதற்கு நான் ஒரு முட்டாள் அல்ல. நம் பிள்ளைகளின் கலப்பு திருமணத்தையும் நாம் செயல்படுத்தாத வரையில், ஜாதி ஒழியாமல் தான் இருக்கும்.

இந்தியாவின் ஒரு துக்ககரமான நிலை என்னவென்றால், கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஜாதியை ஆதரிப்பவர்கள் தான். நம் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், நாம் ஜாதிப் பாகுபாட்டை இன்னும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். என்னுடைய குடும்ப வட்டாரத்திலும் இது உண்டு என்று என்னால் கூறமுடியும். "ஜாதியை நாங்கள் ஏற்கவில்லை" என்று அவர்கள் கூறினாலும், தங்கள் பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது, ஒரே ஜாதியில் தான் அதை செய்யவேண்டும் என வரன் தேடுகின்றனர். அப்படி ஒருவேளை மற்ற ஜாதியில் திருமணம் செய்தாலும், அது ஒரு உயர்வகை ஜாதியாகவே இருக்கவேண்டும் என திட்டமிடுகின்றனர். இந்தவகை கிறிஸ்தவர்களை, நாம் போலி கிறிஸ்தவர்கள் என்றே கூற வேண்டும். அடிப்படை தோற்றத்திலிருந்து ஜாதியை நாம் பார்த்தால், அது கிறிஸ்தவத்துடனோ அல்லது கிறிஸ்துவுடனோ தொடர்பே கொள்ளமுடியாத ஒன்று எனத் தெரிந்துகொள்ளலாம். ஆக, இயேசுகிறிஸ்துவை பின்பற்றுகிறேன் எனக் கூறும் ஒருவர், இப்படி ஜாதியையும் ஆதரித்தால், அவரைப் போலி கிறிஸ்தவர் என்றே கூறலாம். ஆம்! "போலி" என்பதை சற்று அழுத்தியே கூறுகிறேன்.

சரி, என்னுடைய கேள்விக்கு மறுபடியும் வருகிறேன். ஜாதியை ஒழிக்க நிச்சயமாகவே நாம் விரும்புகிறோமா?

ஜாதி என்ற ஒரு கொடிய உலகத்திலிருந்து நிச்சயமாக ஒரு நாள் மீண்டெழுவோம் என்று நான் நினைத்ததுண்டு. தொலை தூரத்தில் உள்ள ஓர் எதிர்கால உலகம் அது. அதே சமயம், தியாகம் என்ற ஒன்று இல்லாதவரை, ஜாதி இல்லாத உலகம் என்பது எப்படி சாத்தியம் என்றும் தோன்றுகிறது. இட ஒதுக்கீடு எனும் சலுகைகளைக் கொண்ட வகுப்பினரோடு, நமது பிள்ளைகளும் சரி சம சலுகைகளைப் பெற வேண்டும் என்கிறோம். ஆனால், தியாகம் செய்வதை நாம் தெரிந்தெடுக்கிறோமா? ஜாதி மறுப்பினால் வரும் இடமின்மையோடு போராடி, அதனிமித்தம் கிடைக்க வேண்டிய சலுகைகளைக் கூட இழக்கின்ற நிலையை தெரிந்தெடுக்கும் தியாகம் அது.

தியாகங்களை நாம் துவக்கத்திலேயே முழுமையாக செய்திட இயலாது தான். ஆனாலும் கலப்பு திருமணங்களில் அது துவங்கட்டுமே. ஏற்பாட்டு திருமணங்கள் தான் நம் சமுதாயத்தின் பெரிய எதிர்பார்ப்பென்றாலும், அதிகரித்துவரும் காதல் திருமணங்களால் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. (நான் இதை, காதல் திருமணங்களை ஆதரித்து அல்ல, ஜாதியை மறுக்கும் திருமணங்களை ஆதரித்து சொல்கிறேன்). அதோடு சேர்த்து, ஜாதியை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்தும், அதன் மூலமாக நாம் ஏற்படுத்தியதும், இப்போது நடைமுறையில் வைத்திருக்கிறதுமான ஜாதி முறையிலான இடஒதுக்கீட்டு முறையிலிருந்தும், அதை ஆதரிக்கும் மக்களிடமிருந்தும் நாம் பிடுங்கி எரியாவிட்டால், ஜாதியை அதின் ஆதிக்கத்திலிருந்து நாம் ஒழிக்கவே முடியாது.

ஆம்! இடஒதுக்கீட்டு முறையை விட, ஜாதி என்பதே நமது மிகப்பெரும் பிரச்சனையாகும். ஜாதி முற்றிலும் ஒழிய அநேகம் தலைமுறைகள் ஆகும் எனத் தோன்றினாலும், "ஜாதி மறுப்பு" சான்றிதழ்களையும் தாண்டி, நாம் செய்யவேண்டியது அதிகம். அதின் அடிப்படையில் நமது திருமணங்களும் ஜாதியின் எந்த ஒரு தாக்கமும் இன்றி நடந்தேரவேண்டும்.

ஜாதி நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் என்றும், அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் நீங்கள் யோசித்தால்....
"தியாகம் செய்தே ஆகவேண்டும்!"


EN: https://samszammy.blogspot.com/2019/02/do-we-really-want-to-be-done-away-with.html

Comments

Popular posts from this blog

தீவிரவாதத்தை பழிவாங்க முடியுமா?